
ஒரு ஆய்வு சுற்றுப் பயணத்துக்காக 9 மாணவர்களை உள்ளடக்கிய குறித்த குழுவானது நேற்றைய தினம் முத்தையன்கட்டு வனப் பகுதிக்கு சென்றிருந்தபோது, வழி தவறி காணாமல்போயுள்ளனர்.
காட்டுக்குள் சென்ற அவர்கள் வெளியே வரமுடியாத நிலையில் சம்பவம் குறித்து இராணுவத்தினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.