
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த புகையிரதத்தில் நபரொருவர் மோதுண்டார். சங்கத்தானை பகுதியில் தொலைபேசியில் உரையாடியபடி, தண்டவாளத்தில் நடந்து சென்றவரே விபத்தில் சிக்கினார்.
அவர் சுதாகரித்து தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்றபோதும், உடலின் ஒரு பகுதி விபத்தில் சிக்கியது. இதனால் அவரது காலொன்று துண்டிக்கப்பட்டது. தென்பகுதியை சேர்ந்த சிங்கள நபரொருவரே விபத்தில் சிக்கினார்.
உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.