எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நேற்று முன்தினம் (03) சனிக்கிழமை பிரான்சில் அதிகபட்சமாக 16, 972 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 12,565 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று வீதமும் 8% இல் இருந்து ஒரே நாளில் 8.2% வீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை (மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து..) 32,230 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக 1340 தொற்று வலையங்கள் தற்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.