வனிதா விஜயகுமார் 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்த ஜுன் 27ம் தேதி மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் பால் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வந்துள்ளார்.
நேற்று வனிதா தனது 3வது கணவர் பீட்டர் பாலுடன் இருந்து பிரிந்துவிட்டார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அதனை குறித்து விளக்கமாக பேசியுள்ளார் வனிதா.
அவர் பேசியது :
பீட்டர் பாலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அதற்காக அவர் மருத்துவமணையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஏன் 14 நாட்கள் தனிமையில் கூட சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் அவர் சிகிரெட் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தவில்லை. நான் அவரை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.
ஆனால் நான் ஏமாந்துவிட்டேன், நான் காதலிச்சவரையே என்னால திருத்த முடியவில்லை, என் உணர்வுகள் செத்துருச்சி என மிகவும் உருக்கமாக கண்கலங்கி கதறி அழுது பேசினார் வனிதா விஜயகுமார்.
மேலும் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்க :