
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அதேவேளை இஸ்லாமியத் தீவிரவாதம் என்பதும் பிரான்ஸில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் மத்தியில் அச்சமும் அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றது.
மக்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக இருப்பது கொரோனா மட்டுமல்ல. அது ஒரு பக்கத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கின்றது.
அடுத்த பக்கம், இஸ்லாமியப் பயங்கரவாதம் எல்லை மீறிச் செல்கின்றது. இதனால் பொலிஸார் மற்றும் அரச துறையினர் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரான்ஸில் ஆசிரியர் ஒருவர் இஸ்லாமியப் பயங்கரவாதியால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளைத் தோற்றிவித்துள்ளதுடன், இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு எதிரான போக்கை பிரான்ஸ் அரசு கடுமையாக்கிக் கொண்டுள்ளது.
பிரான்ஸில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தைப் பொலிஸார் அடங்கி, ஒடுக்கி விடுவார்கள் என 76 வீத மக்கள் மாத்திரமே நம்பிக்கைக் கொண்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மக்கள் நம்பிக்கை என்பது 2015 ஆம் ஆண்டில் 98 சதவீதமாக இருந்துள்ளது.
இப் புள்ளி விபரங்களில் அடிப்படையில் பொலிஸார் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை என்பது வீழ்ச்சியடைந்துள்ளது எனலாம். இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த நம்பிக்கையீனத்துக்கு பொலிஸாரின் செயற்பாடுகளே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செப்ரெம்பர் மாதத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், மற்றும் ஆசிரியரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் 85 வீதமான மக்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தையிட்டு அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமியப் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்து வருகின்றது.
எனவே ஒரு புறம் கொரோனா, மறுபுறம் இஸ்லாமியப் பயங்கரவாதம் என பாரிய இரு பிரச்சினைகளைக் கையாள்வதில் முழிபிதுங்கி நிற்கின்றது பிரான்ஸ் அரசு.