ஜேர்மனியில் கொரோனா கொடூரம்! ஒரே நாளில் அதிகூடிய தொற்று!!



ஜேர்மனியில் நாட்டில் கொரோனாத் தொற்றின் வேகம் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. நாள்தோறும் 10 ஆயிரத்தைத் தாண்டிச் செல்கின்றது.

அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 11287 பேருக்குப் புதிதாக கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கின்றது. மொத்தமாக 397922 பேர் பாதிப்படைந்துள்ளார்கள். 9911 பேர் இதுவரைக்கும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ஜேர்மனியில் 166 பிரதேசங்களில் ஒரு இலட்சம் பேரில் 50 பேருக்குக் இக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஜேர்மனியில் மொத்தப் பரப்பளவில் 40 சதவீதமான பகுதிகள் அபாயமான பிரதேசங்களாக மாறியுள்ளது.

அத்துடன் பல இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜேர்மனியில் இந் நிலை நீடிக்கும் பட்சத்தில் நாடு முடக்கப்படும் நிலை ஏற்படும் என மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் பலர் பொருட்கள் கொள்வனவிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post