யாழில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு “கள்” விற்பனை செய்த நபரால் ஏற்பட்ட ஆபத்து!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு நேற்று (24/10) கள் விற்று அந்த காசில் உரும்பிராயில் உள்ள மதுபானசாலையில் மதுபானம் வாங்கிய நபரால் குறித்த மதுபான விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொரோனா தலைமைப் படுத்தல் நிலையமான கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி செயற்பட்டுவரும் நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சுயதனிமைப் படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் ஒருவர் கல்வியியற் கல்லூரி சுற்றாடலில் உள்ள ஒருவருடைய தொடர்பை எடுத்து மதில் வழியாக கள்ளு வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

தேசிய கல்வியியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவருக்கு கள் விற்பனை செய்த பணத்தில் உரும்பிராய் சந்தியில் உள்ள மதுபான நிலையத்தில் மதுசாரம் வாங்க சென்றுள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.

இதனடிப்படையில் பொதுச் சுகாதார பரிசோதகரும் பொலிசாரும் இணைந்து கொரோணா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த மதுபான நிலையத்தை மூடியதுடன் அங்கு கடமையாற்றுபவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
Previous Post Next Post