ஆனையிறவில் விபத்து! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் உயிரிழப்பு!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஆனையிறவு பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஏ-9 நெடுஞ்சாலையில் ஆனையிறவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் தாங்கி வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய பூசகரான  ராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வித்துக்குள்ளான குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகனும் படுகாயமுற்ற நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அவசசிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் தாங்கியை செலுத்தி வந்த சாரதி பொலிசாரால் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post