பளையில் மர்மநபர்கள் பயங்கரம்! நடு வீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செம்பியன்பற்று மாமுனையைச் சேர்ந்த தனபாலசிங்கம் குலசிங்கம் (வயது -43) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொல்லப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தியவர் அல்லது நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post