கொரோனாவுடன் நந்தார் பண்டிகையைச் சந்திக்க தயாராகும் பிரான்ஸ் – புதிய நடவடிக்கைக்கு ஆலோசனை


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • அருண் சண்முகலிங்கம்
பிரான்ஸில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நெருக்கமாக வியாபார நிலையங்களுக்குச் செல்லாமல் இருக்க சிறிது சிறிதாக உள்ளிருப்பு நடவடிக்கையைத் தளர்த்துமாறு பிரெஞ்சு நகர பிதாக்களின் சங்கம் பிரதமர் Jean Castex அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவரான முன்னாள் அமைச்சர் François baroin இதைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “இப்பொழுது முதல் இந்த உள்ளிருப்பு நடவடிக்கையை அரசாங்கம் சிறிதுசிறிதாக தளர்த்தி மக்களை தங்களது பண்டிகைக்கால பொருட்களை வாங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

கிராமங்களாக நகரங்களாக மாவட்ட ரீதியாக உள்ளிருப்பு நடவடிக்கையைத் தளர்த்தி இந்த உதவியை அரசாங்கம் மக்களுக்கும் மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கும் செய்ய வேண்டும்.

சில வியாபார ஸ்தலங்களை முதலாம் திகதி டிசம்பர் மாதம் திறக்க அரசாங்கம் அனுமதி வழங்க இருப்பதாக தெரிய வருகிறது. ஆனால் Black Fridayஎன்று அழைக்கப்படும் இருபத்து ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வியாபார ஸ்தலங்களை திறப்பதற்காக பொருளாதார அமைச்சர் Bruno le Maire ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஆனால் டிசம்பர் மாதம் முதலாம் திகதி தான் இந்த நிறுவனங்கள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பிரான்ஸ் நாட்டின் அதிபர் Emmanuel Macron உள்ளிருப்பு நடவடிக்கையில் அடுத்தகட்டம் பற்றியும் உள்ளிருப்பு நடவடிக்கை எப்பொழுது தளர்த்தப்படும் என்பது பற்றியும் நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் உரையாற்றவுள்ளார்.

இதேபோன்று பிரான்ஸ் பிரதமர் Jean Castex வரும் வெள்ளிக்கிழமை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கொரோனவைரஸ் தொற்று தொடர்பாக உரையாடவுள்ளார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் Olivier veron வரும் வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பாக பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றை நடத்தவுள்ளார்.

கொரோனா வைரஸ்க்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் இப்பொழுது தனது அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
Previous Post Next Post