பிரிட்டன் அங்குலாவின் ஆளுநராக முதல் ஈழத்து தமிழ் பெண் மகாராணியால் நியமனம்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரிட்டன் நாட்டின் அங்குவிலாவின் ஆளுநர் பதவிக்கு முதல் ஈழத்து தமிழ் பெண் திலினி டானியல் செல்வரத்தினம் நியமனம் பெற்றுள்ளார்.

பிரிட்டன் மகாராணியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் பரம்பரையைச் சேர்ந்த திலினி டானியல் செல்வரத்தினம் 1999ஆம் ஆண்டு சட்டத்தரணியாகத் தெரிவானார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைமாணியை முடித்த அவர், பிரிட்டன் அரசியல் அலுவல்களுக்கான துறையில் கொள்கை ஆலோசகராக 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை பதவி வகித்தார்.

2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை பிரிட்டன் நீதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றினார்.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிரிட்டன் நீதித்துறையில் பல்வேறு நிறைவேற்றுப் பதவிகளில் சேவையாற்றினார்.

தற்போது பிரிட்டன் அமைச்சரவையின் பணிப்பாளராக உள்ள திலினி டானியல் செல்வரத்தினம், அங்குவிலாவின் ஆளுநர் பதவிக்கு பிரிட்டன் மகாராணியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post