கள்ளக் காதல் விவகாரம்! சென்னையில் இலங்கைத் தமிழர் வெட்டிப் படுகொலை!! (வீடியோ)எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் நடிகர் கள்ளக் காதல் தொடர்பால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ தொடரில் துணை நடிகராக நடித்திருப்பவர் செல்வரத்தினம் (45). சென்னை எம்.ஜி.ஆர் நகர் வள்ளல்பாரி தெருவில் வசித்து வரும் இலங்கைத் தமிழரான இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும், இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு உள் கட்டமைப்பு காண்ட்ராக்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 6.30.மணியளவில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோடு பகுதிக்கு ஆட்டோவில் வந்த 4 பேர் வள்ளல் பாரி தெருவில் உள்ள செல்வரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளனர். 

வீட்டின் வாசலுக்கு வந்த அந்த நபர்கள் செல்வரத்தினத்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிறகு வெட்டிய நான்கு பேரும் அருகாமையில் உள்ள வீட்டில்  இருந்த சி.சி.டி.வி கமராவை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தகவலறிந்து வந்த எம்.ஜி.ஆர். நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணையில் விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த செல்வரத்தினத்துக்கும் அதே முகாமில் தங்கியிருந்த விஜயகுமார் என்பவரின் மனைவி டயானா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

டயானாவையும் செல்வரத்தினத்தையும் விஜயகுமார் பலமுறை எச்சரித்தும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்ததால் விருதுநகர் அகதிகள் முகாமில் இருந்து சென்னை வந்து செல்வ ரத்தினத்தை வெட்டி படுகொலை செய்துள்ளார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post