யாழ்.ஆனைக்கோட்டையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.ஆனைக்கோட்டை - ஓட்டுமடம் பகுதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கி பயணித்த ஆட்டோ மீது ஆறுகால்மடத்திலிருந்து யாழ்.நகரம் நோக்கி பயணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், 

அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுனர்.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். 


Previous Post Next Post