நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 8 பேர் சாவு- 749 பேர் பாதிப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 264ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், நாட்டில் இன்று 749 பேர் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 53 ஆயிரத்து 62 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 635 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post