யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்புக்கு பரீட்சை விடைத்தாள் திருத்துவதற்காகச் சென்று திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் தொண்டை நோ காரணமாக தானாகவே முன்வந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனைக்கு அவர் உட்பட்டதாகவும் இன்று அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post