பிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி-மண்டைதீவுப் பகுதிகளைச் சேர்ந்த செல்லத்துரை (உடையார்) மற்றும் வேலாயுதபிள்ளை (வேவி) ஆகியோரின் பேர்த்தியான கார்த்திகா குலேந்திரா (வயது-22) என்ற, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கடந்த 08.01.2021 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் மந்துவில் வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த சினேகா சந்திரராசா (வயது-18) என்ற, பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி பயிலும் மாணவி கடந்த 13.01.2021 ஆம் திகதி அன்று அகால மரணமடைந்துள்ளார்.

இவர் பிரான்ஸ் செவ்ரோன் தமிழ்ச்சோலையின் மாணவியும் ஆவர். சிறந்த கல்வியாற்றல் கொண்ட குறித்த மாணவியின் இம் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு மருத்துவத்துறை மாணவிகளின் அடுத்தடுத்த உயிரிழப்புக்கள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post