யாழையும் குறிவைத்துள்ள தொல்பொருள் திணைக்களம்! நிலாவரையில் அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், தியாகராஜா நிரோஷ், அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

“இங்கு புராதனக் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Previous Post Next Post