யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் புத்த விகாரை மீது தாக்குதல்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏற்கனவே, பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்கத் தேவாலயம் என்பன கொட்டில்களில் காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு கொரோனாக் காலத்திலும் வழிபாடுகள் இடம்பெற்றுவந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையில், கடந்தவாரம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இடிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post