
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இந்தச் சம்பவம் கிளிநொச்சி – பரந்தன் இடையே வயல்வெளிப் பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மேரி ஜாக்சன் அன்ரனி (வயது -30) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த போது மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
