கேம் விளையாட கைபேசியைக் கொடுக்காததால் யாழ்.பாடசாலை மாணவன் தற்கொலை!


தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் ஒருவன் தாயார் தொலைபேசியினைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம், சுழிபுரம் பிளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்விகற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் என்ற 15 வயதான மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையினால் மாணவனின் தாயார் தொலைபேசியை பறித்து வைத்துள்ளார். அதனைப் பொறுக்க முடியாத மாணவன் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றதுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post