யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கிராமம் முடக்கப்படுகின்றது!


யாழ்.இணுவில் ஜே/190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவை முடக்குமாறு சுகாதார பிரிவினால் யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங் காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இணுவில் ஜே/190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 

இதன்  காரணமாக கிராமத்தின் ஒரு பகுதியினை தனிமைப்படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியில் பல தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியினை முடக்குவதற்கு அனுமதிகோரி சுகாதாரப் பிரிவினரால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post