பயணக் கட்டுப்பாடு! மதுபானசாலைகளுக்குப் பூட்டு!! மதுபோதையில் வீதியில் விழுந்து கிடக்கும் முதியவர்!!!


கிளிநொச்சி தருமபுரம் பரந்தன் முல்லை A35 வீதியில் முதியவர் ஒருவர் அயர்ந்து தூங்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன்,  குறித்த முதியவர் மது போதையில் அவ்வாறு வீதியில் தூங்கியதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மது விற்பனை நிலையங்களும் பூட்ட்டப்பட்டுள்ளன. 

எனினும் கள்ளச் சாராயம் என்ற பெயரில் சட்ட விரோத கும்பலினால் விற்பனை செய்யப்படும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இவர் போன்றவர்கள் இவ்வாறு வீதியில் விழுந்து கிடப்பதற்கு காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post