ஜேர்மனியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யாழ்.இளைஞன்!


ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம் வேணுகாந்தன் (யது 34) என்ற இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார்.

தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டு சில வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே இவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post