பயணத் தடையிலும் அடங்காத கொரோனா! ஊரடங்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவுகள் முடிவெடுக்கும்!!


நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு விதிக்க வேண்டுமா? என்பது பற்றி தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகள் கலந்துரையாடி ஒரு முடிவை எட்டும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை வரும் ஜூன் 14ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடையினால் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்கள் மற்றும் பதிவாகும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடையவில்லை என கோவிட்-19 நோய்த்தொற்று தடுப்பு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.
Previous Post Next Post