தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதியில் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய காரணமின்றி யாழ்ப்பாணம் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் பயணித்தவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சனின் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அலுவலர்கள், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.