ஊரடங்கு அறிவிப்பின் எதிரொலி! யாழில் முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்!!


ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் உள்பட நாட்டின் நகரப் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் வங்கி தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

நாட்டில் ஊரடங்கு அல்லது பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டால் யாழ்ப்பாணத்தின் எரிபொருள் நிலையங்கிளில் மக்கள் திரண்டு எரிபொருளினைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இன்றும் அதேபோல அவர்கள் குவிந்துள்ளனர்.

இதயைடுத்து இன்று பிற்பகல் முடக்கம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் ஒவ்வொரு எரிபொருள் நிலையங்களிலும் வர்த்தக நிலையங்களிலும்  திரண்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

திருநெல்வேலி சந்தி வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகின்றது.

அங்குள் அனைத்து பல்பொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கொள்வனவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

அவ் வீதிகள் எங்கும் வாகன நெரிசல் ஏற்பட்டுப் போக்குவரத்துப் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 
Previous Post Next Post