மண்டைதீவு சித்தி விநாயகர் ஆலய வெளி வீதிக்கு மின் விளக்குகள்! (படங்கள்)

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய வெளி வீதிக்கு  மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்) மற்றும் இரத்தினசபாபதி ஸ்ரீரங்கநாயகி ஆகியோரின் 2 இலட்சம் ரூபாய் நிதிப் பங்களிப்புடன் குறித்த மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post