பிரித்தானியாவில் காதலியை காரால் மோதிய இலங்கைக் காதலன்! சந்தோகத்தால் நடந்த விபரீதம்!!!

பிரித்தானியாவில் இளைஞர் ஒருவரின் பொறாமை குணத்தால் இளம் பெண் தன் வாழ்நாள் முழுவதும் துயரத்தை அனுபவிக்கும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விவகாரத்தில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட இலங்கை இளைஞர் Lakshman Samarakoon என்பவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமர்ஷாம், பக்கிங்ஹாம்ஷயர் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தமது பெற்றோரின் வாகனத்தை பயன்படுத்திய Lakshman Samarakoon, அதை தமது காதலியான Dina Sapra மீது மோதியுள்ளார்.

மட்டுமின்றி, வாகனம் Dina Sapra-ன் கால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் அவரது கால் எலும்புகள் நொறுங்கியுள்ளதுடன், ஒரு கால் மொத்தமாக வெட்டி நீக்கப்படும் பரிதாப சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது 20 வயதாகும் Lakshman Samarakoon தமது காதலியை எப்போதும் கட்டுப்படுத்தவே முயன்று வந்துள்ளார். தொடர்ந்து தமது காதலியை கண்காணிப்பதை வழக்கமாக கொண்டுள்ள அவர் ஆண்கள் எவரேனும் குறுந்தகவல் அனுப்பினால், அவர்களை முடக்கவும் செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று Lakshman Samarakoon மற்றும் Dina Sapra ஆகிய இருவரும் பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்கு தனித்தனியாக சென்றிருந்தனர். இந்த நிலையிலேயே Dina Sapra-ன் மொபைலில் ஆண் நண்பர் ஒருவரின் குறுந்தகவல் ஒன்றை Lakshman Samarakoon காண நேர்ந்துள்ளது.

இதில் ஆத்திரம் மற்றும் பொறாமை கொண்ட Lakshman Samarakoon மொபைலைப் பறித்துக் கொண்டு, தம்மை ஏமாற்றுவதாக Dina Sapra-வை கடுமையாக கண்டித்துள்ளார். தொடர்ந்து வாகனத்தை இயக்கிய Lakshman Samarakoon தமது காதலி மீது மோதி வீழ்த்தியதுடன் 999 இலக்கத்திற்கு அழைத்து தகவலும் அளித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், Lakshman Samarakoon-கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், விடுதலைக்கு பிறகு 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post