யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக மீளவும் நாளை பொறுப்பேற்கிறார் மருத்துவர் சத்தியமூர்த்தி!


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி நாளை மீண்டும் பொறுப்பேற்கிறார்.

பிரிட்டனில் மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பித்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.

எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.

அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு அவர் நாளை காலை 8 மணிக்கு தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்கவுள்ளார்.
Previous Post Next Post