கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிச் சென்ற கப் ரக வாகனமும் டிப்பரும் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் கப் வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கனகராயன்குளம் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Previous Post Next Post