ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் நான்கு கட்டங்களாக மீளவும் பாடசாலைகள் ஆரம்பம்!


நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னர் 4 கட்டங்களாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ், தரம் 1-5 ஆரம்ப வகுப்புகள் உள்ள 3 ஆயிரத்து 884 பாடசாலைகள் திறக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post