யாழ்.துன்னாலையில் 30 வயது பெண் கைது! (படங்கள்)

யாழ். வடமராட்சி துன்னாலையில் வீடொன்றில் ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 30 வயது பெண்ணே இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
Previous Post Next Post