நள்ளிரவுடன் உச்சத்தைத் தொட்டது எரிவாயுக்களின் விலைகள்!


12.5 கிலோ கிராம் லிப்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ஆயிரத்து 257 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது.

அதன்படி, புதிய விலை 2 ஆயிரத்து 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 503 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ஆயிரத்து 101 ரூபாயினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் 231 ரூபாயினால் அதிகரித்துள்ளது

இதேவேளை, உள்நாட்டு லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 984 ரூபாய் அதிகரித்துள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம், 12.5 கிலோ எடை கொண்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2 ஆயிரத்து 840 ரூபாய் ஆகும்.

மேலும், ஐந்து கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 333 ரூபாய் அதிகரித்து புதிய விலை ஆயிரத்து 136 ஆகும்.

இதேவேளை, லிப்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் நள்ளிரவு தொடக்கம் அதிகரித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2 ஆயிரத்து 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை நிர்ணயம் கொழும்பு மாவட்டத்துக்கானது. ஏனைய மாவட்டங்களில் விநியோகச் செலவீனம் உள்ளடங்களாக விலை நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post