கனடாவில் சுமந்திரனின் கூட்டத்தில் தள்ளுமுள்ளு! பொலிஸார் வரவழைக்கப்பட்டு வெளியேறிய சுமந்திரன்!! (வீடியோ)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கனடா கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்றில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி 'சுமந்திரன் தமிழினத் துரோகி' என்று கோசமிட்டு கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதன் காரணமாக குறித்த பகுதிக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுடதுடன், கூட்டத்தின் இடைநடுவே சுமந்திரன் வெளியேறிச் சென்றார்.
Previous Post Next Post