நல்லூர் பிரதேச சபை உறுப்பினரின் விடா முயற்சியால் காப்பெற் வீதியாகியது சட்டநாதர் வீதி! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெய்வேந்திரன் கிரிதரனின் முயற்சியின் பலனாக நல்லூர் சட்டநாதர் வீதி காப்பெற் வீதியாக மாற்றமடைந்துள்ளது. 

இவ் வீதிக்கு காப்பெற் போடுவதற்கான கோரிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த உறுப்பினரால் விடுக்கப்பட்டு வந்துள்ளது.

நல்லூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உறுப்பினரால் குறித்த வீதிக்கு காப்பெற் போடுவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுவினரால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 

இருந்தும் கடந்த இரண்டு வருடங்களாக வீதியை காப்பெற்றாக மாற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந் நிலையில் நேற்று முன்தினம் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது குறித்த வீதி காப்பெற் வீதியாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. 

அத்துடன் இவ் வீதியை காப்பெற் வீதியாக மாற்றுவதற்கு சட்டநாதர் சிவன் ஆலய மற்றும் கொண்டலடி வைரவர் ஆலய நிர்வாகத்தினர், சனசமூக நிலைய நிர்வாகத்த்தினர், நொதேர்ன் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர் ஆகியோரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post