நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!


கொழும்பு மாவட்டம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

பிலியந்தலை, கல்கிசை, அதுருகிரிய, மொரட்டுவை, பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

கொத்மலை மின் நிலையத்திலிருந்து பியகம உப மின் நிலையத்திற்கான உயர் அழுத்தக் கேபிள்கள் பழுதடைந்துள்ளன. 

மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post