சுவிஸில் பள்ளி மாணவனுக்கு “ஒமெக்ரோன்” தொற்று! 100 பேர் தனிமைப்படுத்தலில்!!

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு புதிய கொரோனா மாறுபாடான  “ஒமெக்ரோன்” தொற்றியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

உலக நாடுகளை மீண்டும் கொரோனா பீதியில் ஆழ்த்தியுள்ளது புதிய மாறுபாடான ஒமெக்ரோன், ஆபத்து மிகுந்தத. அதிக கவனம் தேவை என உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் தற்போது நேரடி விமான சேவைகளை தடை செய்துள்ளதுடன், விமானப்பயணிகளை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் இருவருக்கு ஒமெக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஒமெக்ரோன் தொற்று பாதிப்பு தொடர்பில் அடையாளம் காணப்பட்ட இருவரும் பாஸல் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், அதில் ஒருவர் 19 வயதான பள்ளி மாணவன் எனவும், அவருக்கு அந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டதன் பின்னணி தெரியவில்லை எனவும், குறித்த மாணவர் சமீபத்தில் விமான பயணம் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

பள்ளியில் பொதுவாக முன்னெடுத்துவரும் வழக்கமான சோதனையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், பின்னர் அது ஒமெக்ரோன் மாறுபாடு எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த மாணவருடன் தொடர்பில் இருந்த சுமார் 100 பேர்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவருக்கு ஒமெக்ரோன் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Previous Post Next Post