எரிபொருள்களின் புதிய விலை இன்று 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு!


எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவுடன் ( டிச:20)அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்திருந்தது. 

எனினும் புதிய விலைகள் இன்று டிசம்பர் 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் புதிய விலை 177 ரூபாய்.

95 ஒக்டைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 23 ரூபாவினால் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 207 ரூபாயாகும்.

டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 121 ரூபாயாகும்.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 159 ரூபாயாகும்.

இதேவேளை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 87 ரூபாயாகும்.
Previous Post Next Post