பிரான்ஸில் வேகமெடுக்கும் “ஒமெக்ரோன்” தொற்று!


பிரான்ஸில் ஒமெக்ரோன் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் முதல்கட்டமாக 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒமெக்ரோன் தொற்றுத் தொடர்பில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post