பொரள்ளை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
முழு முக தலைக்கவசம் அணிந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இவ்வாறு கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு பொலிஸார் செல்வதற்கு முன்னதாக அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர்களை சீ.சீ.டிவி கமாராவின்மூலம் அடையாளம் கண்டு, கைது செய்வதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.