இந்தச் சம்பவம் மிருசுவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
தவசிக்குளம், கொடிகாமம் என்ற முகவரியைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய சூசைநாதன் பிரதீபன் (சுரேன்) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.
பாதுகாப்பு சமிஞ்சை விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.