ஹெலிகொப்டர் விபத்து! இந்திய முப்படைத் தளபதியும் மனைவியும் உயிரிழப்பு!! (படங்கள்)

குன்னூரில் உள்ள காட்டேரி நஞ்சப்பா சத்திரம் மலைப்பகுதியில் இந்தியாவின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த இதில் 13 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை ஹெலிகொப்டரை செலுத்திய விமானி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

யார் இந்த பிபின் ராவத்?

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிபின் ராவத். இவரது குடும்பம் பல தலைமுறைக்காக ராணுவத்தில் பணியாற்றி வருகிறது. இவர் டெஹ்ராடூன், சிம்லா, தமிழகத்தின் வெலிங்டன! ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றுள்ளார். மேலும் அமெரிக்காவில் ராணுவம் குறித்து பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் தந்தை பணியாற்றிய அதே படையில் உயரதிகாரியாகப் பதவியேற்றார் பிபின் ராவத். மலைப்பகுதிகளில் போர் புரிவதிலும், ஆட்சிக்கு எதிரான குழுக்களை ஒடுக்குவதில் இவர் கைத்தேர்ந்தவர்.

நாடு முழுவதும் பல்வேறு ராணுவப்படைக்குத் தலைமை தாங்கியிருந்தாலும், ராணுவத்திற்கான கல்வி தேடலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இதனால் தான் 2011ம் ஆண்டு ராணுவ போர்த்திறன் குறித்த ஆய்வுக்காக சௌத்ரி சரண் சிங்க பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணினி அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

2008ம் ஆண்டு காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில் இந்தியாவின் சார்பாக சென்ற பிரதிநிதிகளில் ஒருவர் பிபின் ராவத்.

இந்திய ராணுவ தளபதியாக 2019, டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் பிபின் ராவத். இதையடுத்து முப்படை தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார்.

Previous Post Next Post