யாழில் கடற்படையினரின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல்! (படங்கள்)


யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்குச் சொந்தமான வாகனம் மீது இன்று மாலை கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ். பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post