கனடா நாடாளுமன்ற உறுப்பினரான இலங்கைத் தமிழருக்கு பிரதமரால் வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பு!

கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இலங்கை தமிழர் Gary Anandasangareeக்கு புதிய பொறுப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கியுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான Gary Anandasangaree வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

இந்த நிலையில் Gary Anandasangareeக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

அதன்படி நீதித்துறை அமைச்சர் மற்றும் தலைமை சட்டத்தரணிக்கு நாடாளுமன்ற செயலாளராக Gary Anandasangaree நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post