கிளிநொச்சியில் 14 வயது சிறுமி மாயம்! தொலைபேசியில் பெற்றோருக்கு மிரட்டல்!!


கிளிநொச்சியில் 14 வயது சிறுமியை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரி வீதி, கிளி நகர் பகுதியில் வசிக்கும் செந்தூரன் பகலினி என்ற 14 வயதுடைய சிறுமியே கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் சிறுமி தொடர்பாக பெற்றோரிடம் வினவியபோது, கடந்த 17 ஆம் திகதி மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், தங்களுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள சிறுமி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 0774188975 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post