கொரோனா இனத்தின் புதிய வைரஸ் கண்டறிவு! மூன்றில் ஒருவரைக் கொல்லும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!


நியோகோவ் (NeoCoV) என்ற புதிய வைரஸ் கொரோனா வைரஸை விட ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள வௌவால்களிடமிருந்து கொரோனா இனத்தில் புதிய வைரஸைக் கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, தென்னாப்பிரிக்காவில் வௌவால்கள் மத்தியில் நியோகோவ் வைரஸ் பரவுவதால், அது தொடர்ந்து பிறழ்ந்தால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளவால்களின் எண்ணிக்கையில் நியோகோவ் வைரஸ் காணப்படுவதாகவும், அது மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதாக இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் சீன அறிவியல் அகடமி மற்றும் வுஹான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த வைரஸ் வேகமாகப் பரவி மூன்றில் ஒருவரை கொல்லக்கூடும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Previous Post Next Post