முல்லைத்தீவுக் கடற்பரப்பில் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில் கரையொதுங்கிய பாரிய கப்பல்! (வீடியோ)

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.

சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த கப்பல் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். கரை ஒதுங்கியுள்ள கப்பலை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த கப்பல் யாருடையது எங்கிருந்து வந்துள்ளது விபத்துக்குள்ளாக்கியதா ? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post