திருமணம் செய்வதாக அழைத்துச் சென்று சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் இலங்கைப் பெண்கள்!


இலங்கையிலுள்ள இளம் பெண்கள் சீனாவில் தகாத வர்த்தக நடவடிக்கைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு வரும் சீன நாட்டவர்கள் திருமணம் என்ற பெயரில் பல இளம் பெண்களை சீனாவுக்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறானவர்களை அந்நாட்டில் தவறான நடத்தைக்கு பயன்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வலையில் சிக்கிய ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீன மோசடியாளர்களின் தகாத வர்த்தக நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

குறித்த இளம் பெண் சீன நாட்டவர்களால் மறைக்கப்பட்டாரா அல்லது வேறு அழுத்தம் காரணமாக மறைந்துள்ளாரா என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

அவ்வாறான 10 பெண்கள் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் இதற்கு முன்னர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post