யாழில் டெங்கு நோயால் சிறுவன் உயிரிழப்பு!

யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலைய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் வயது 11 என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில் பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிகச் சிறந்த புள்ளிகளை பாடசாலை மட்டத்தில் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post