கனடா வரலாற்றில் முதன் முறையாக அவசரகாலச் சட்டம் நடைமுறை!


கனேடிய வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தடுப்பூசி ஆணைக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தின் பயன்பாடு நியாயமான மற்றும் வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கும். இராணுவம் நிலைநிறுத்தப்படாது என ட்ரூடோ குறிப்பிட்டார்.

இதன்மூலம் போராட்டங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நபரினதும் தனிப்பட்ட கணக்குகளையும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல், வங்கிகள் முடக்கி வைக்க முடியும்.

பொலிஸாருக்கு இதன் மூலம் அதிக அதிகாரம் அளிக்கப்படும். பயங்கரவாத நிதியளிப்பு தடை உத்தரவை போன்று வாகன சாரதிகளின் போராட்டங்களை நிதியளிக்கும் மூலங்களைக் கண்டறிந்து முடக்கவும் பயங்கரவாத சட்டம் அதிக அதிகாரங்களை வழங்கும்.

"முற்றுகைகள் நமது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன அத்துடன், பொது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன" என்று நேற்று அவசர கால சட்டத்தை அறிவித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

"சட்டவிரோத மற்றும் ஆபத்தான நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க முடியாது, அனுமதிக்க மாட்டோம்." எனவும் அவா் குறிப்பிட்டார்.

கனடாவில் 1988 இல் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம், தேசிய நெருக்கடி காலங்களில் அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.

கனேடிய நாட்டவர்கள் உயிர்கள், உடல்நலம் அல்லது பாதுகாப்பிற்கு தீவிரமாக ஆபத்தை விளைவிக்கும் எனக் கருதப்படும் அவசர மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post